Tuesday, March 1, 2022

ஏ .எம். சாஜித்

 

ஈழத்து படைப்பாளிகளையும் பேசுவோம் (1)

ஏ .எம். சாஜித்

 00

 

சுந்தர ராமசாமியையும், ஜெய காந்தனையும்,

ஜெயமோகனைஎஸ்.ராமகிருஷ்ணனையும்

சாருநிவேதிதாவையும், ரமேஷ் பிரேம்,

எம்.ஜி.சுரேஷ், தமிழவன், குட்டி ரேவதி,

சுகிர்தராணி பேராசிரியர் அ. மார்க்ஸ்

போன்ற பெரும் தமிழகப் பட்டியலினை ஈழத்து

படைப்பாளிகள் மெச்சுவது போன்று.. (அதில்

தவறில்லை இருப்பினும்)

இயங்குகின்றஈழத்தில் இயங்கிய,  டானியல்,

நந்தினி சேவியர், அ.ஸ. அப்துஸ் ஸமது,

டொமினிக் ஜீவா, எஸ்போஸ், செங்கை

ஆழியான்தீரன்.ஆர்.எம். நௌஷாத்விமல்

குழந்தைவேல், கருணாகரன், அனார், மதுசூதனன்

பேராசிரியர் சே.யோகராசா போன்ற பெரும்

பட்டியலினை யாரும் மெச்சுவதில்லை..

 

 ஆர்.எம்.நௌஷாத் ..

 

இதனை ஈழத்து பூதந் தேவனாரில் இருந்து ஆரம்பிக்க வேணடியிருந்தாலும் சமகாலத்தில் இயங்குபவர்களை தொட்டு எமது பார்வையினை செலுத்தலாம் என நினைக்கிறேன்...

முதலாவதாக தீரன். ஆர்.எம் நௌஷாத் ஈழத்தில் மிக முக்கியமான படைப்பாளி கிழக்கின் மண்வாசனையினை தனது நாவல்களினூடே வெளிப்படுத்தி தனக்கான எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டவர். நட்டுமை, கொல்வதெழுதுதல், நாவலும் வெள்ளி விரல் எனும் சிறுகதை தொகுப்பு என படைப்புக்களை தந்த தீரன் தற்பொழுது இலக்கிய உரையாடல்கள் மூலமாக ஈழத்து பரப்பில் இயங்கி வருகிறார்...

முகநூலே இன்றைய இலக்கிய செற்பாட்டுத் தளத்தின் வீரனாக வலம் வருகின்ற நிலையில் தீரனின் எழுத்துலகம் பற்றி ஈழத்துப் படைப்பாளிகள் கதையாட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது. தமிழ் இலக்கிய பரப்பின் நாவல்களின் வருகையில் தீரனின் படைப்புக்கள் நிறைய விவாதங்களை பேசக்கூடியவை கிராமிய வாழ்வு முறை தொட்டு அரசியல் தளம் வரைக்கும் கதையாடிய மிக நீண்ட பரப்பினை தனது நாவல்களில் பேசியவர் தீரன்...

இதில் கொல்தெழுதுதல் அரசியல் சூழலில் நின்று இயங்கிய ஒரு ஹீரோயிசப் பிரதி என்றே கூறலாம். இவ்வகையான புதுமைப் படைப்புக்கள் ஈழத்து சூழலில் பெரும் கதையாடலினை தோற்றுவிக்கக் கூடியவை. அவை பற்றி நிறையப் பேச வேண்டும். நாம் இருக்கிறோம், செத்து மடியவில்லை எமது எழுத்துக்களும் காத்திரம் மிக்கவைதான் என முழு இலககிய சூழலுக்கும் எத்தி வைக்க எமது படைப்பாளிகள் முன் வருதல் அவசியமாகிறது...

குறிப்பு: இது தேடலுக்கான கோடு மட்டுமே. ஆகையால் தீரனின் படைப்புக்களைத் தேடி வாசிப்போம். பேசுவோம்...

(நாளை இன்னுமொரு ஈழப் படைப்பாளியுடன்....)

000

 

 

 

 

No comments:

Post a Comment