Tuesday, March 1, 2022

ஞாயிறு தினக்குரல். --- தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.

 

ஞாயிறு தினக்குரல். 2013.11.03 நேர்காணல்---

 தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.

௦௦

 '.........இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட தளங்களில்  உள்ள தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்...'

 

 00 ~வல்லமை தாராயோ..|ää (2000)ää ~வெள்ளிவிரல்| (2011)ää ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் ~நட்டுமை| (2009) என்ற நாவலையும்  தமிழிலக்கிய உலகுக்கு அளித்தவர்.

  00 தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  இவர் தனது ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு வென்றவர்.

  00 தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டவர்.

  00 1998ல்  ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு பெற்றவர்.

  00 இவரது ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..

  00 அத்துடன்ää இவரது ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

  00 ~ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் தனது  ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு உட்பட  மேலும்ää பற்பல இலக்கியப் போட்டிகளில்  தமது வித்தியாசமான வார்ப்பிலான சுமார் 19 சிறுகதைகளுக்கு பற்பல பரிசில்கள் பெற்றவர்.  அவருடனான ஒரு நேர்காணல் இது..........

 ௦௦ 

  கேள்வி--- முதலில் உங்களது பிரத்தியேக வாழ்நிலை பற்றி ஒரு சுருக்க அறிமுகம் செய்வதானால்....?

  பதில்---- நல்லது..நான் தொழிலால் ஒரு தபால் அதிபர். இலங்கையின் பற்பல பகுதிகளிலும்  சுமார் 30 வருடங்கள் சேவையாற்றிய பின் தற்போது என் சொந்த இடமான சாய்ந்தமருது தபாலகத்தில் பொறுப்புத் தபாலதிபராக கடமை செய்கின்றேன்.. மூன்று பிள்ளைகளின் தந்தை.. மனைவி பாத்திமா றிபாயா..


கேள்வி--- எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்..?

  பதில்---- ~கல்முனை ஸாஹிறா| இலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று. 1975ல் பாடசாலை வெளியீடான ~அம்பு| சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று கொஞ்ச காலம்... 1990க்குப்  பின்னர் ஒன்றும் எழுதாமல் ~இலக்கிய நெடுந்தூக்கம்.|... இக்காலப்பகுதி முழுவதும் படிப்புää தொழில்..திருமணம் குடும்பம்..என்று போயிற்று.. இருப்பினும் தோன்றும் போதெல்லாம் எழுதி எழுதி வைத்துக் கொண்டும் செவ்வை பார்த்துக் கொண்டும் அநேகமாக புத்தகங்கள் வாசித்துக் கொண்டும்தானிருந்தேன்.. இலக்கிய நெடுந்தூக்கத்திலிருந்து மீண்டெழுந்து ..2000ம் ஆண்டில் ~வல்லமை தாராயோ!| சிறுகதைத் தொகுதியை கொணர்ந்தேன்.. அதிலிருந்து தொடர்ச்சியாக  எழுதி வருகின்றேன்..

 

 கேள்வி--- உங்களது சிறுகதைத் தொகுதிகள் பற்றியும் அவற்றின் வார்ப்பு நிலைகள் பற்றியும் அறிய விரும்புகிறோம்....?

  பதில்---- ~வல்லமை தாராயோ..!| என்பது எனது முதல் சிறுகதைத் தொகுதி.. 2000ல் வெளியானது. எட்டுச் சிறுகதைகளை உள்ளடக்கியது இது. எனினும் நமது ~விமர்சன மற்றும் இரசனைக் குறிப்பு| எழுதுகிற ~அறிஞர்களால|; அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாமல் முடங்கி விட்டது. புpன்னர்ää பற்பல இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து தமிழ்நாடு காலச்சுவடு நிறுவனம் ~வெள்ளிவிரல்| என்ற பெயரில் ஒரு தொகுதியாக வெளியிட்டது. இது 2011ன் அரச சாகித்திய விருதையும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் பெற்றது.

  வார்ப்பு நிலை என்று கேட்டீர்கள்.. இது விரிவான விசயம்.. ஓரு சிறுகதையின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்த போதிலும்ää என்னைப் பொறுத்த வரையிலும் இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட தளங்களில்உள்ளää தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன். முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத் தந்திரம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்;.


 கேள்வி---- நாவல் முயற்சிகளைப் பற்றிக் கூறுவதானால்...?

  பதில்---- என் முதல் குறுநாவல் ~வானவில்லே ஒரு கவிதை கேளு..| ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வண்ணங்களாக வெளியாயிற்று. இரண்டாவது குறுநாவல் ~பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக பிரசுரமானது. இது 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டது. அக்காலத்து அரசியல் போக்கினால்  பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின்  வாழ்வியல் பற்றிய இக்குறுநாவல் பின்னர்ää நண்பர்களான எம். பௌசர்ää எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது தற்போது மேலும் செவ்விதாக்கப்பட்டு  ~கொல்வதெழுதுதல். 90| என்ற தலைப்பு மாற்றத்துடன் இவ்வருட இறுதியில் இன்ஸா அல்லாஹ் வெளியாக உள்ளது..

 என் மூன்றாவது முழு நாவல் ~நட்டுமை|  இது கிழக்கு மண்ணின் 1940க்கு முந்திய விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில் ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து  தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது. சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்| மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். புகழனைத்தும் இறைவனுக்கே!

 எனது  நான்காவது நாவல் ~சாந்த-மாமா| பிரசுரமாகாதுள்ளது.. ஐந்தாவது நாவல் ~யுத்த பிக்குகள்| - இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது.

 நாவல் எழுதுவது தனி ஒரு நுட்பம். மிக நீண்ட சிறுகதையை ஒரு முழுநாவலாக்கி விடுவோரும் ஒரு நாவலையே ஒரு சிறுகதையாக்கி விடுவோரும் இந்த நுட்பம் தெரியாதோரே... இந்த நாவல்த் தொழிநுட்பத்தை நான் கற்றுக் கொண்டு கையாள ஆரம்பித்த போது வாசகர்கள் பொதுவாகää நாவல்கள் வாசிப்பதையே பெரும்பாலும் நிறுத்தியிருந்தனர்....

 இந்த தேக்க நிலையிலும் இப்போதும் நாவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.. வாசிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.. ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ~கரு எச்சங்கள்| வியாபித்து வெடிப்பது நாவலில்தானே...அந்தப் பிரசவம் தரும் வலி இனிது. அதன் வடிவமைப்புகள் பெரிது.. அதனூடான சஞ்சாரம் ஒரு ஆபத்தான அழகு.. ஓரு நாவலைப் படித்த பின் அக்கதை மாந்தருடன் வாசகர் வாழும் காலமெல்லாம் அந்நாவலும் அதன் தயாரிப்பாளியும் நித்திய ஜீவியமடைகிறார்கள்; என்பதே உண்மை.

 

 கேள்வி---- கவிதைத் துறை ஈடுபாடுகள் மற்றும் அனுபவங்களைக் கூறுவதாயின்....?

  பதில்---  1977 தொடக்கம் கவிதைகள் என்று நினைத்துக் கொண்டு சிலவற்றை பற்பல பத்திரிகைகளில் எழுதி வந்தேன். எல்லாம் புதுக்கவிதைகள்தாம். ~கொக்கூர்கிழான்| கா.வை. இரத்தினசிங்கம் ஐயா அவர்களின் பயிற்சியின் பின் மரபுக் கவிதை வாள் சுழற்றவும்ää ~குறும்பா. வெண்பாக் கத்திகள் எறியவும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.. அல்அஸ_மத்தின் ~பூபாளம்| கவியேடு நடத்திய குறும்பாப் போட்டியில் பரிசு பெற்றது ஒரு தனி ஆனந்தம்.  1981 இலிருந்து 1989 வரை ~தூது| என்ற பேரில் ஒரு கவிதைச் சிற்றேட்டை நண்பர் றாபீக்குடன் சேர்ந்து  16 இதழ்கள் வரை வெளியிட்டேன்... தூது இதழில் ஆசிரியத் தலையங்கங்களை வெண்பாääகுறும்பாக்களில் எழுதித் தீ மிதித்தேன்.  நண்பர் கல்முனை முபாறக்கின் ~அல்ஜஸீறா| பத்திரிகையின் அச்சுச் சாதனங்களைக் கொண்டு நானே எழுத்துக் கோர்த்து அச்சகம்  கொண்டு சென்று அச்சடித்து  வெளியிட்ட அந்தப் போர்க் காலங்கள் கூட அழகியன... கவிதைத் தொகுதி ஏதும்  இன்னும் வெளியிடவில்லை..

 1986களில் ~வாஷிங்டன் கனவு|ää 1989 ல்- ~இன்னாலில்லாஹி...| போன்ற  ரோணியோ கவிதைத் தொகுப்புக்கள். 1993 ல் ஹைக்கூ கவிதைகளுக்கென்றே ~புள்ளி| என்ற சிற்றிதழ்.. (இரண்டே இதழ்கள்தாம்  வந்தன) . பிறகு 2002ல் ஏ.எம். ஜாபீர்ää நகிபுடன் சேர்ந்து ~இரண்டாவது பக்கம்| கவியேடு.. இப்படிச் சில..

 கவிதையின் மூலப் பொருட்கள் வட்டார வழக்காக இருக்கட்டும் அல்லது அம்மண வார்த்தையாயிருக்கட்டும்ää அல்லது மரபுப் பர்தாவைப் போர்த்திக் கொண்டிருக்கட்டும்ää எதுவாயினும்ää ~பெருகிய உணர்வின் இறுகிய சிந்தனைச் சிறைப்பிடிப்பே கவிதை| என்று எனது குருநாதர் பாவலர் பஸீல் காரியப்பர் கூறுவதை விடவும்  அவை வேறானதல்ல என்றே இன்னமும் உணர்கிறேன்.

 

 கேள்வி---    இலங்கை வானொலி நாடகங்களின் மீதான  உங்கள் ஈடுபாடுகள் பற்றி...?

  பதில்---  ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம்  இருக்கும்  வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன.. வானொலி நாடகங்களுக்காக  நேயர்கள் காத்துக் கிடந்தனர்..  வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..! 1985ல்  எனது முதல் வானொலி நாடகம் ~வாக்கு| முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை  சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான்  அவர்களின் நெறியாழ்கையில்ää எழுதியிருக்கின்றேன். இவற்றில் ~ஒரு கிராமத்தின் கவிதை| சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.. வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| நாடகத்திற்கு  தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம்  பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~விண்மீன் வீடு| என்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையை நினைந்துää இப்போதும் நனைந்து மகிழ்கிறேன்..

  நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää ஏ.எல்.ஜபீர்ää ஏ.ஆர்.எம். ஜிப்ரிää எம். தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ää _ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாக| திகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.

  ஓலிபரப்பாகிய நாடகங்களில்  கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~முஸ்லிம் நிகழ்ச்சியில் அடுத்ததாக....| என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.

 

 கேள்வி---  கதைகளைத் தவிர வேறு என்னென்ன தளங்களில் இயங்கியிருக்கிறீர்கள்...?

  பதில்----   2008ல் ~விடிவெள்ளி|யில் ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..||என்ற தலைப்பில் பாவலரின் படைப்புலகில சஞ்சாரம் செய்திருக்கிறேன்.. (10 தொடர்கள் எழுதி இடைநடுவில் நிறுத்தி விட்டார்கள்) நவாஸ்சௌபியின் ~நல்லுறவு|;  இதழில் 2009ல் ~விழித்திரையில் விரியும் வெண்திரை|  என்று அயல்மொழிச் சினிமாக்கள் பற்றிய  தொடர் மற்றும்ää  ~யாத்ரா| வில்  ~செல்லிடம் பேசேல்| என்ற தலைப்பில் சில வாழ்வியல் நகைச்சுவைக் கட்டுரைகள்.. இப்போது  அபாபீல்கள் வலைத்தளத்தில் ~ஆத்மாவின் வலைகள்...| என்ற தலைப்பில் சில ஆன்மீகத் தகவல்கள் தொகுத்து வருகிறேன்..

 

 கேள்வி---  யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்...  என்ன வாசிக்கிறீர்கள்..?

 பதில்--  தமிழகம் புலம்பெயர் ஈழம் என்றில்லாமல் கைக்குக் கிடைப்பதையெல்லாம் வாசித்து விடுவதுண்டு.. முன்னரெல்லாம் நமக்குத் தொழில் வாசிப்பு.. யோசிப்பு என்றிருந்தேன்.. இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்தே வாசிக்கின்றேன். வலைப் பூக்களிலும்  இணைய தளங்களிலும் கொஞ்சம் வலம் வருகின்றேன்..  தற்போது சூபித்துவ மெய்ஞான தமிழ்மொழி இலக்கியங்களை ஆய்ந்து வருகின்றேன்..

 

 கேள்வி---  நாவல்ää சிறுகதைகள் உருவாக்கத்தில் உங்களின் உத்தி என்ன..? ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்...?

  பதில்---   உத்தி என்பது என்ன.. நாம் உருவாக்குவதுதானே.. ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்புää கதா மாந்தர்ää நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சுää மொழிநடைää உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்ää  செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. உண்மையில் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லலோருக்கும் அருளப்படுவது கிடையாது.  நினைத்தவுடன் பேப்பரை எடுத்து கதை (எழுதி) விடுவதில் எனக்குச் சம்மதமில்லை..

 

 கேள்வி---  இறுதியாக தினக்குரல் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...?

 பதில்---  ஞாயிறு தினக்குரலில் என் 7 சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.. தினக்குரலின் அனுசரனையில் நடத்தப்பட்ட வானொலி நாடகப் போட்டியில் பரிசு பெற்றுள்ளேன்.  என் ~வல்லமை தாராயோ!|  சிறகதைத் தொகுதி விமர்சனம் தினக்குரலில்தான் முதலில் வெளிவந்தது. நான் தினக்குரலின் நீண்டகால வாசகன்.  ஓரு தினக்குரல் வாசகி என் கதைகளை வியந்துää ~நீ ஒரு இடது கை இறைவன்..|என ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கும் அனைத்து தினக்குரல் வாசகருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...! 

00

 

 

No comments:

Post a Comment